Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடல்களில் இருந்து… நகை திருட்டு… ஊழியர் கைது…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தீவிர முயற்சிக்குப் பிறகு பல மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தது. இறந்தவர்களின் உடல்களை ஊழியர்கள் சடங்குகளை செய்து தகனம் செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இறந்தவர்கள் உடமைகள் அனைத்தையும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் பல மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடமைகளை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்காமல், திருடி விடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

அப்படி ஒரு சம்பவம் நான் தற்போது நடந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிணவறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் முத்துகிருஷ்ணன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களில் இருந்து நகைகளை திருடி விடுவதாகவும் இதுதொடர்பாக புகார் தரப்பட்ட காரணத்தினால் போலீசார் விசாரணை நடத்தி அவரிடமிருந்து இரண்டரை சவரன் நகையை கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |