திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இதனையடுத்து விஜய் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அதன்பின் விஜய் சில நாட்களாக அந்த பெண்ணை சந்திப்பதையும், அந்த பெண்ணிடம் பேசுவதையும் நிறுத்தி விட்டார்.
இதனால் அந்த பெண் விஜய்யின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். இதனையடுத்து நியாயம் கேட்க சென்ற அந்த பெண்ணை விஜய்யும், அவரது குடும்பத்தினரும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் திருமயம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.