Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீண்டும் திறக்கப்பட கடைகள்…. 50 % பேர் மட்டும் அனுமதி…. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!

நகை மற்றும் ஜவுளிக்கடைகள்  அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

தமிழகத்தில் கோரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி நகை மற்றும்  ஜவுளிக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோன்று பல்வேறு வணிக கடைகளை திறப்பதற்கும், பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளித்தும், பொது போக்குவரத்து தொடங்குவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பெரும்பாலான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம், கேப் ரோடு, வடசேரி, செட்டிகுளம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள் அனைத்தும் காலையில் இருந்து திறக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக எங்கும் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் நகை மற்றும் ஜவுளி சென்று கடைகளுக்கு தங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து வாங்கினர். இந்த கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி திறக்கப்பட்ட நகை மற்றும் ஜவுளி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர். நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை பேருந்து போக்குவரத்து தொடங்கியதை அடுத்து அங்கிருந்து அகற்றப்பட்டது.

இதனால் நேற்று முதல் வடசேரி காய்கறி சந்தையில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு அங்குள்ள மொத்த கடைகளில் பாதி கடைகள் ஒருநாளும், மீதமுள்ள கடைகள் அடுத்த நாளும் மாறி மாறி திறக்க மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி நேற்று பாதி கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் அதிகமாக வரவில்லை என்றாலும்  சிலர் அங்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். இதேபோன்று சாலையோர பூ மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், பலகாரக் கடைகள், உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவற்றை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. மேலும் பல்வேறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும் நேற்று முதல் திறக்கப்பட்டதனால் நாகர்கோவில் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Categories

Tech |