Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்த வாலிபர்… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த வாலிபரை அழைத்து சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவரிடம் கஞ்சா இருப்பதை பார்த்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக பாலகிருஷ்ணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |