Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க ஒன்னுமே இல்லையே… நடந்த அதிர்ச்சி சம்பவம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வங்கி ஊழியரின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சண்முகநாதன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின் பீரோவை உடைத்து பார்த்த போது அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய சண்முகநாதனின் குடும்பத்தினர் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |