பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்வதற்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இதேபோன்று திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் செல்லும் உதவியாளர்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் அறிவித்து நடைமுறைப்படுத்தினார்.
இதனையடுத்து மற்ற பயணிகளுக்கு அவர்களின் கட்டணத்தை பொறுத்து பயணச்சீட்டு வழங்கும்வதை போன்று மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் போன்றோருக்கு இலவச பயணச்சீட்டு வழங்கும் பணிநடைபெற்றது. இந்த நடைமுறை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கிய முதல் அமலுக்கு வந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்து பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய நகரப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச பயணச்சீட்டில் மா.தி குறியீட்டுடன் கூடிய பயணச்சீட்டும், அவருடைய உதவியாளர்களுக்கு மா.உ என்ற குறியீட்டுடன் கூடிய பயணச்சீட்டும், திருநங்கைகளை குறிப்பிடும் வகையில் தி.ந என்ற குறியீட்டுடன் இலவச பயணசீட்டு நேற்று முதல் வழங்கப்பட்டது.