Categories
உலக செய்திகள்

“இந்த படகுதான என்ன அடிச்சது!”.. மொத்தமா ஒன்னுக்கூடி தாக்கிய திமிங்கலங்கள்.. பரபரப்பு வீடியோ வெளியீடு..!!

பிரிட்டன் நபர்கள் சென்ற ஒரு படகை ஜிப்ரால்டருக்கு அருகில் சுமார் 30 திமிங்கலங்கள் சேர்ந்து நகரவிடாமல் தாக்கும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

கிரேக்கத்திற்கு செல்வதற்காக ஒரு சொகுசு படகு கென்டில் இருக்கும் ராம்ஸ்கேட் என்ற பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த படகில் பிரிட்டன் மாலுமிகள் மூவர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ஸ்பெயின் கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 25 மைல் தூரத்தில் திடீரென்று படகை முன்னோக்கி நகர்த்த விடாமல் திமிங்கலங்கள் மொத்தமாக சேர்ந்து தாக்கத் தொடங்கியுள்ளது.

எனவே உடனடியாக படகின் இயந்திரம் மற்றும் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. எனினும் திமிங்கலங்கள் தாக்குதலை விடவில்லை. இதனால் மாலுமிகள், படகு மூழ்கி விடுமோ என்று பதறியதாக கூறுகிறார்கள். எனினும் 30 திமிங்கலங்கள் ஒன்றாக சேர்ந்து திடீரென்று தாக்குதல் நடத்தியது எதற்கு? என்று புரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

அந்த படகில் உள்ள ஒரு நபர் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், அதில் ஏதோ ஒரு திமிங்கலம் படகில் அடிபட்டிருக்கும். அதனால் பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு செய்திருக்கும் என்று கூறுகிறார்கள். தற்போது சேதம் அடைந்த படகு ஜிப்ரால்டரில் நிறுத்தப்பட்டுள்ளது.

 

Categories

Tech |