Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களால சமாளிக்க முடியல… போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்… விருதுநகரில் பரபரப்பு…!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கட்சியினர் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் ஆங்காங்கே போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனால் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் இணைந்து சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், தளவாய்புரம், விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் விருதுநகர் நடத்தப்பட்ட போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சக்கணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் முருகன் ஆகியோர் தலைமை ஏற்றனர். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமியும், தளவாய்புறத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவ்வாறாக 10 இடங்கள் முழுவதும் சேர்ந்து 350 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |