Categories
உலக செய்திகள்

புகழ்பெற்ற கலைப்படைப்புகள் திருட்டு.. 8 வருடங்களுக்கு பிறகு மீட்பு..!!

கிரீஸில் கடந்த 2012 ஆம் வருடத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மாண்ட்ரியன் மற்றும் பிக்காசோ கலைப்படைப்புகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் இருக்கும் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகத்தில் மிகவும் பிரபலமடைந்த இரு கலைப்படைப்புகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 8 வருடங்களுக்கு பின் தற்போது அது மீட்கப்பட்டிருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது இருபதாம் நூற்றாண்டில், Piet Mondrian மற்றும் Pablo Picasso போன்ற ஜாம்பவான்கள் அந்த கலைப்படைப்புகளை வரைந்துள்ளார்கள். கடந்த 1949ஆம் வருடத்தில் ஸ்பெயின் ஓவியரான பாப்லோ பிகாசோ, க்யூபிஸ்ட் பெண்ணை மார்பு வரை வரைந்திருந்தார். அதனை  இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜி படைகளை எதிர்த்து கிரேக்க மக்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக கிரீஸ் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மொண்ட்ரியன் என்ற டச்சு ஓவியர், கடந்த 1905 ஆம் வருடத்தில் ஆற்றங்கரை காற்றாலையை ஓவியமாக வரைந்திருந்தார். இவை தான் கடந்த 2012 ஆம் வருடத்தில் ஜனவரி 9 ஆம் தேதி அன்று திருடப்பட்டுள்ளது.

Categories

Tech |