Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க கொண்டு வர முடியாது… தள்ளுபடி செய்யப்பட்ட மனு… நீதிபதிகளின் அதிரடி உத்தரவு…!!

டாக்டர் ஜெயவெங்கடேஷ் கோவிலில் சித்த மருத்துவமனை அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் டாக்டரான ஜெயவெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி மக்களை அதிகமாக தாக்குகிறது. இதனால் இந்தக் கொரோனா பெரும் தொற்றுக்கு ஆங்கில வழி சிகிச்சை பெற்றாலும் முதன்மையான தமிழர்களின் சித்த மருத்துவமனை சிகிச்சையும் அளிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றை முழுவதுமாக நீக்க முடியும் என்று ஜெயவெங்கடேஷ் கூறியுள்ளார்.

ஆகவே 1970ஆம் ஆண்டு அரசாணைப்படி ஒவ்வொரு கோவில்களிலும் சித்த மருத்துவ மையம் அமைக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட்டில் டாக்டர் ஜெயவெங்கடேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கொரோனா பெரும் தொற்றுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவித்துள்ளனர். எனவே இந்த கோரிக்கை மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |