மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது பொருளாதார தொகுப்பு அல்ல, மற்றொரு புரளி என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, 20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டும். சுகாதாரத் துறைக்கு 50 கோடி, மற்ற துறைகளுக்கு 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர கால கடன் உதவியாக தொழில் முனைவோருக்கு 1.5 லட்சம் கோடி கடன் வங்கிகள் மூலம் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வருகை தரும் முதல் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அவர் தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவமனை உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு 100 கோடி வரை கடன் வழங்கப்படும். சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உத்திரவாதம் என்று ஒரு லட்சம் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இவை அனைத்தும் எந்த ஒரு குடும்பமும் தங்களது வாழ்க்கை, உணவு, மருந்து, குழந்தைகளின் பள்ளி கட்டணங்களுக்காக பயன்படுத்த முடியாது. இது தொகுப்பு அல்ல, மற்றொரு புரளி என்று காங்கிரஸ் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.