அமெரிக்காவில் நடைபெறும் ஆங்கில உச்சரிப்பு போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒன்பது பேர் பங்கேற்க உள்ளார்கள்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், வரும் ஜூலை எட்டாம் தேதி
வால்ட் டிஸ்னி வேர்ல்டு ரிசார்ட்டில் ஆங்கில வார்த்தை உச்சரிப்பு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள இறுதி போட்டியாளர்கள் 11 பேரில் 9 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 1999-ம் ஆண்டு முதல் இப்போட்டிகள் நடந்து கொண்டு வருகின்றது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இந்த ஆண்டு இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.