ஆயுதப்படை தளபதிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இங்கிலாந்து ராணுவத்தில் ஆயுதப்படை தளபதியாக இருப்பவர் நிக் கார்ட்டர் .இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது . இதனால் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மூத்த ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ராணுவப் படைத் தளபதி நிக் கார்ட்டர் கலந்துகொண்டார் .
இந்த ஆலோசனை கூட்டத்தில் ராணுவ மந்திரியான பென் வாலஸ் உட்பட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராணுவ படைத் தளபதிக்கு தொற்று இருப்பது உறுதியானதால் அவருடன் ஆலோசனை கூட்டத்தில் தொடர்பில் இருந்த அதிகாரிகள் அனைவரும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அதிகாரிகளும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் .