நடிகர் சிவாஜி கணேசன் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 1952-ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான தில்லானா மோகனாம்பாள், பாசமலர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல ஹீரோக்கள் நடிகர் சிவாஜியுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் சிவாஜி படங்களில் பல வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் சிவாஜி வெளிநாட்டில் ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் அணிந்து ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி அமெரிக்கா சென்றபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.