சுவிட்சர்லாந்து அரசு, தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்திக்கொண்ட இந்திய மக்களுக்கு தன் நாட்டிற்குள் அனுமதியளித்துள்ளது.
உலக நாடுகளில் முதன் முதலாக சுவிட்சர்லாந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. அதிலும் கோவிஷீல்டு தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட இந்திய மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் நுழையும்போது, பிசிஆர் முறையில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் காட்ட வேண்டிய தேவையில்லை. எனினும் விமானத்தில் பயணிக்கும் போது சான்றிதழ் அவசியம். இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையே நேரடியாக விமான போக்குவரத்து இல்லாததால், ஆம்ஸ்டர்டாம் மற்றும் பாரீஸ் வழியில் தான் பயணிகள் செல்ல வேண்டியுள்ளது.