சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் மஹா . இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
#maha @malikstreams @ihansika @SilambarasanTR_ @Etceteraenter @ghibranofficial @MathiyalaganV9 @Act_Srikanth@DoneChannel1@murukku_meesaya @dir_URJameel pic.twitter.com/ZkXtdEBngN
— Hansika (@ihansika) June 29, 2021
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது . இந்நிலையில் மஹா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் வருகிற ஜூலை 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசருக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் .