Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு நேர்ந்த அவலம்… விசாரணையில் சிக்கிய இளைஞர்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பேர்பக்ஸ் கவுண்டி என்னும் பகுதியை சேர்ந்த 18 வயதிற்கு குறைவான டீன் ஏஜ் நபர் ஒருவரும், பிரெட்ரிக் பென் எனும் இளைஞனும் சேர்ந்து கடந்த 2020-ஆம் ஆண்டு மனநிலை சரியில்லாத பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பிறகு வேறு ஒரு பெண்ணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளான இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் விசாரணைக்கு பின் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரை அணுகுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |