உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் போலீஸ் ஒருவரின் சீருடையை இளைஞர் ஒருவர் கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 2 காவல்துறை பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும், மற்றொருவர் ஈவ்டீசிங் செய்பவரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மாஸ்க் அணியாமல் தனது 10 வயது குழந்தையுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்த பெண் போலீஸ் ஏன் முக கவசம் அணியாமல் வந்தீர்கள் என்று கேள்வி கேட்க, அதற்கு அந்த வாலிபர் அப்பெண்ணின் சீருடையை நடுரோட்டில் வைத்து கிழித்து வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் கொடுமையான சம்பவம் எது என்றால் இதனை அப்பகுதியில் இருந்த அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது மட்டும் இல்லாமல், செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனால் பதறிப்போன மற்றொரு பெண் போலீஸ் அருகில் உள்ள உயர் காவல் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அந்த அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து பெண் போலீசாரை வன்கொடுமை செய்ததாகவும், அரசாங்க ஊழியர்களை கடமையாற்ற விடாமல் தடுப்பதற்காகவும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.