Categories
மாநில செய்திகள்

கூடங்குளத்தில் ரூ. 50,000 கோடியில்… 5 & 6 அணு உலைகள்….!!!

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் ரூபாய் 50,000 கோடி செலவில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

கூடங்குளத்தில் உள்ள இந்தியாவின் பெரிய அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகளை அமைப்பதற்கு ரூபாய் 50 கோடி செலவாகும். இந்த செலவில் பாதி தொகையை ரஷ்யா கடனாக வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏழு ஆண்டுகள் கழித்து மின்னுற்பத்தி நடைபெறத் தொடங்கும் என்று இந்திய அணுமின் நிறுவன இயக்குனர் எஸ் கே ஷர்மா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கூடங்குளத்தில் ஐந்து மற்றும் ஆறாவது அணுஉலையை உருவாக்குவதற்கான இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் வியாழக்கிழமை அன்று கையெழுத்து இடுகின்றது. இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்கும் ஆகும் செலவு ரூபாய் 50 கோடி ஆகும். புதிய அணு உலையில் முதலாவது 66 மாதங்களில் உருவாக்கப்படும் என்றும், மற்றொன்று ஆறு மாதங்களுக்குப் பிறகு உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார். ரஷ்யாவின் அணு உலை நிறுவனமான ரோஸாட்டம் நிறுவனத்தின் கிளை இந்த அணு உலைகளை உருவாக்குகிறது.

Categories

Tech |