மீனம் ராசி அன்பர்களே.! வாய்ப்புகள் தேடி வரும்.
இன்று சில புதிய வாய்ப்புகள் தேடி வரும். தடைபட்ட பண வரவுகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கும் முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டிலிருந்து தரக் கூடிய தகவல்கள் மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும். தனவரவு சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சி ஏற்படும். வீண் பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். பேச்சுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பயணங்கள் செல்ல நேரிடும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் வேண்டும். வாகனங்களை ஓட்டும் போது பொறுமை தேவை.
ஆவணங்களை சரிபார்த்து கொண்டு வாகனத்தில் செல்ல வேண்டும். முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கூர்மையான பொருட்களை கவனமாக கையாள வேண்டும். காதல் பிரச்சினை ஏற்படுத்தாது. காதல் ஒருவித நிம்மதியை கொடுக்கும். பிரச்சனையான காதல் கூட சரியாகும் காலகட்டமாக இருக்கின்றது. மாணவர்களுக்கு படிப்பு பற்றிய அக்கறை இருக்கும். படிப்பில் சாதிக்க முடியும். கல்வியில் முன்னேற முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்