இந்தியாவில் பரவிவரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி தீவிரமாக போடப்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் வெளிநாடு செல்லும்போது ஆகும் பரிசோதனை செய்யப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் ஒரு சில நாடுகள் இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அந்த நாட்டிற்கு சென்ற உடன் மீண்டும் தடுப்பூசி சேர்த்துக் கொள்ளவும் வலியுறுத்துகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுவிட்சர்லாந்தின் அறிவிப்பு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் கொரோனா பரிசோதனை இன்றி தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப் படுவார்கள் என சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 26ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் இன்றி சுவிட்சர்லாந்து செல்லலாம்.