Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு சென்ற புகார் …. மாட்டிக்கொண்ட போலி மருத்துவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை ….!!!

முறையாக மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு  சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில் தூசி கிராமத்தில் வள்ளுவர் தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் முறையாக மருத்துவம்  படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளது. இதுகுறித்து வெண்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் பாண்டியன் தூசி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சங்கரலிங்கத்திடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இவர் டிப்ளமோ பாராமெடிக்கல் படித்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது . இதையடுத்து போலி மருத்துவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |