Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! கவனம் தேவை….! தடைகள் ஏற்படும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! கவனம் தேவை.

இன்றைய நாள் எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடைகள் ஏற்படும். நீங்கள் தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தான் வெற்றி கொள்ள முடியும். அதற்கு நிலையான மனது வேண்டும். மனதில் அமைதி வேண்டும். பொறுமை தேவை. திட்டமிட்ட காரியங்களை மாற்றம் செய்வீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். மனம் நோகும்படி பேச வேண்டாம். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். நிதானம் வேண்டும்.தொழில் வியாபாரத்தில் பணத் தேவைகள் ஏற்படும். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. உதவி கேட்பவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்து கொடுப்பீர்கள். சூழ்நிலையை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லவேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உறவினரிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். காதல் குழப்பத்தில் இருக்கும். காதலுக்கு தேவையா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் கல்வியில் முன்னேற்றத்தை அடைய முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீலம்

Categories

Tech |