ஹரியானா மாநிலம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக ஆளும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் முகுந்தன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி செல்வி ஆகியோர் சந்தித்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக பிஜேபி கட்சி நடத்திய கூட்டணி பேச்சு வார்த்தையில் தொகுதி பங்கீடு சரியாக கிடைக்கப் பெறவில்லை என்றும் தனது கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் மாயாவதி அறிவித்திருந்தார். இந்நிலையில் மாயாவதி காங்கிரசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.