நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜுமா கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான அவருடைய பதவி காலத்தில் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் ஜேக்கப் ஜூமா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்ற உத்தரவை மீறியதாக அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்கா வரலாற்றிலேயே அதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் ஜேக்கப் ஜூமா 5 நாட்களுக்குள் தனது சொந்த ஊரான குவாசுலு-நடால் மாகாணத்தில் உள்ள நகண்ட்லா அல்லது ஜோகன்னஸ்பர்க் போலீஸ் நிலையத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் துணை தலைமை நீதிபதி ரேமண்ட் சோண்டோவின் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு ஜுமா ஒத்துழைக்க மறுத்ததால் தீர்ப்பு வழங்கி உள்ளது .இதற்கு முன்னாள் அதிபர் ஜுமா பொதுமக்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் விசாரணை ஆணைய தலைவர் ரேமண்ட் சோண்டோ தனக்கு எதிரானவர் என்றும், தனக்கு எதிராக முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார் .