துணிவு மற்றும் வீர சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதில் 5 லட்சம் காசோலை, பதக்கம் வழங்கப்படும். பெண்கள் விருதுக்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள், அதற்கு உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 30 என அரசு அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பெண்கள் பயன்படுத்த கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories