கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு பினராயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் நோய்த்தொற்று காரணமாக, பலரும் உயிரிழந்து வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் இறந்தவர்களை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கின்றனர். சில மாநிலங்களில் அவ்வாறு செய்வதில்லை. இதனால் கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று முறைப்படி இறுதி சடங்கு செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாத சூழ்நிலையால் பலரும் கூடுதல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு ஒரு மணிநேரம் மட்டும் வீட்டில் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.