2021-2022 ஆம் கல்வியாண்டில் 63 லட்சம் பட்டியல் இன மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.2500 முதல் ரூ.13,500 வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்காத மாணவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு socialjustice.nic.in என்ற இணையத்தளத்தை அணுக வேண்டும்.
Categories