டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வுகளில் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயங்கிவருகின்றது. ரயில் நிலையங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதுபற்றி பயணிகள் ஒருவர் கூறும்போது ஒரு மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்கிறேன், ரயில் நிலையத்திற்குள் நுழைய இதுபோன்று காத்திருக்க வேண்டியுள்ளது. அதன்பின் எப்படி பயணம் செய்து எப்போது வீடு சென்று அடைவது. கோடை காலங்களில் இது மிகவும் கடினமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.