Categories
தேசிய செய்திகள்

ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வேணுமா… விண்ணப்பிப்பது எப்படி…? வாங்க பாக்கலாம்….!!!!

மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை 2000 என்று வருடத்திற்கு 6000 விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

பிஎம் கிசான் நிதியுதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்வதற்கான முழுப் பொறுப்பும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளது. பி.எம் கிசான் தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .

என்னென்ன ஆவணங்கள் தேவை?

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் ஜன தன் வங்கி கணக்கு விவரங்கள் தேவைப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தின் போது, பிரதமர் கிசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் ’ஃபார்மர்ஸ் கார்னர்’ என்ற ஒரு பிரிவு உள்ளது . இந்த போர்டல் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் தங்களது பெயரைத் திருத்தம் செய்ய இந்த போர்ட்டலையும் பயன்படுத்தலாம். நிதியுதவியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களையும் இந்தப் பக்கத்தில் விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம்.

எப்படி சரிப்பார்ப்பது?

முதலில் பி.எம். கிஷான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையமான pmkisan.gov.in-க்கு செல்லவும். அங்கே பயனர்களின் நிலை (Beneficiary Status) என்ற ஆப்சனை ஃபார்மர்ஸ் கார்னர் (Farmers Corner) என்ற பிரிவில் தேர்வு செய்யவும்.

ஆதார் அட்டை, வங்கி கணக்கு அட்டை அல்லது தொலைபேசி எண் என மூன்றில் ஏதாவது ஒன்றை உள்ளீடாக கொடுத்து உள்ளே நுழையவேண்டும்..

இந்த எண்களை வைத்து உங்களுக்கு தவணை வழங்கப்பட்டுவிட்டதா என்பதையும் அறிந்து கொள்ள இயலும்.

இந்த எண்களை உள்ளீடாக கொடுத்தால் உங்களுக்கு இதுநாள் வரையில் வழங்கப்பட்டிருக்கும் தவணைகள் தொடர்பான அனைத்து தகவல்களும் வழங்கப்படும். கூடுதலாக 8வது தவணை எப்போது வழங்கப்படும் என்ற தகவல்களும் அந்த இணையத்தில் வழங்கப்படுகிறது.

Categories

Tech |