தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு டிக்கெட் வழங்க தனியாக புதிய வண்ணத்தில் டிக்கெட் தயார் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நகரப் பேருந்துகளில் புதிய வண்ணம் பூச நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.