தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5- வது சீசனில் நடிகர் ராணா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நாகர்ஜுனா தான் ஒத்துக்கொண்ட படப்பிடிப்பு காரணமாக தொகுத்து வழங்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை ராணா தொகுத்து வழங்குவார் என கூறுகின்றனர். அதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதில் பங்கேற்க உள்ள பிரபலங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
Categories