தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர், மணமகன், மணமகள் வீட்டார், முன்னின்று நடத்துபவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஜாமீனில் வெளிவரமுடியாத கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை மீறி திருமணம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.