தனது கணவனின் கள்ளத்தொடர்ப்பு தெரிந்ததால் பெண் ஒருவர் தீ குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் பாதை பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கும் பிரம்ம குண்டம் பகுதியில் வசிக்கும் கண்ணன் மகள் லட்சுமிக்கும் சென்ற 9 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து திருமணத்திற்கு பின்பு தண்டபாணி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து லஷ்மியை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் வேறொரு பெண்ணிடம் தண்டபாணி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த லட்சுமி மனமுடைந்து தனது வீட்டின் பின்புறத்தில் வைத்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இவ்விபத்தில் உடல் வெப்பம் தாங்காமல் லட்சுமி சத்தம் போட்டு கத்தியதில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் காப்பாற்ற முடியாமல் உடல் கருகி சம்பவ இடத்திலேயே லட்சுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது பற்றி லட்சுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துயுள்ளனர். மேலும் திருமணமாகி ஒன்பது மாதத்திற்குள் லட்சுமியின் சாவுக்கு வரதட்சனை கொடுமை காரணமா இருக்குமோ என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.