தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் பள்ளிகளை படிப்படியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். முதலில் பிளஸ் 2, பிளஸ் 1, 10 ஆம் வகுப்புகளை தொடங்கலாம். ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகளை திறக்கலாம். அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க தயாராக உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.