குடும்ப பிரச்சனை காரணமாக சலூன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள செட்டியூர் காளியம்மன் கோவில் பகுதியில் ஆனந்த் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை ஒன்றை வைத்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்துக்கும், சித்ராவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஆனந்த் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் மனைவி சித்ரா தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆனந்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.