Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மீண்டும் முன்பதிவு நடக்குமா ? நடக்காதா ? … எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி கார் ..!!

எம்ஜி நிறுவனத்தின்  ஹெக்டர் எஸ்யூவி காரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது  ஹெக்டர் எஸ்யூவி காரை  இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஹெக்டர் எஸ்யூவி காரை  28,000 பேர் இந்தியாவில் முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை நிறுத்தியுள்ளது . மேலும், எம்ஜி மோட்டார் நிறுவனம் மாதத்திற்கு 2,000 காரை மட்டும் உற்பத்தி இலக்காக வைத்திருந்ததால்,

Image result for எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி கார் ..!!

வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, இந்த காரின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கான முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில், எம்ஜி நிறுவனம் குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் ஹெக்டர் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், எம்ஜி நிறுவனம் இரண்டாவது ஷிஃப்டிலும் கார் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

Image result for எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி கார் ..!!

இந்நிலையில், ஹெக்டர் எஸ்யூவி காரின் முன்பதிவை மீண்டும் துவங்குவதற்கான திட்டம் குறித்து எம்ஜி நிறுவன அதிகாரி முக்கியத் தகவல் ஒன்றினை  வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, எம்ஜி இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் “ஹெக்டர் டெலிவிரி குறித்த முறையான செயல்திட்டத்தை வகுக்கும் வரை புக்கிங்கை மீண்டும் திறக்கும் எண்ணம் இல்லை என்றும் முதலில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவிரி கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் கூறினார்.

Image result for எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி கார் ..!!
மேலும், ஹெக்டர் உற்பத்தியை அதிகரிக்கும்போது மீண்டும் உற்பத்தியை துவங்குவதற்கான திட்டம் உள்ளதாகவும், அடுத்த மாதம் மீண்டும் முன்பதிவு துவங்குவதற்கான வாய்ப்பும் உள்ளதாகவும், தற்போது 16,000 பேர் காத்திருப்போர் பட்டியலில் பெயர் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு மிக நீண்ட காத்திருப்பு காலம் இருப்பதால், பலர் அண்மையில் வந்த கியா செல்டோஸ் காரின் மீது கவனத்தை திருப்பியுள்ளனர்.
Image result for எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி கார் ..!!
இதனால், தகுதியுடைய வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாமல், காத்திருப்போர் பட்டியலில் பெயர் சேர்த்து வருகிறோம் என எம்ஜி மோட்டார் நிறுவனம் கூறியுள்ளது. இந்த எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானது எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள்,
Related image
பனோரமிக் சன்ரூஃப், 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், இந்த சாதனம் நேரடி இணைய வசதியையும் அளிக்கிறது. இந்த காரின் விலை.ரூ.12.18 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், இந்த கார் பாதுகாப்பு அம்சங்களில் அசத்தலாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் கடும் போட்டி போட்டு புக்கிங் செய்து வருகின்றனர்.

 

Categories

Tech |