Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க சென்ற போது… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சாலடியூர் பகுதியில் ஆறுமுக பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 11 வயதுடைய கணேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணேஷ்குமார் அப்பகுதியில் வசிக்கும் சில பேருடன் இணைந்து தனது மாடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கணேஷ் குமார் தண்ணீர் குடிப்பதற்காக அப்பகுதியில் இருக்கின்ற கிணற்றுக்கு சென்றுள்ளார். அப்போது கணேஷ்குமார் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து தண்ணீர் குடிப்பதற்காக சென்ற கணேஷ்குமார் நீண்ட நேரமாகியும் வராததால் அவர்கள் அந்தக் கிணற்று பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கணேஷ் குமாரின் உடல் கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றுக்குள் குதித்து கணேஷ்குமாரின் சடலத்தை மீட்டனர்.  இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேஷ் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |