Categories
உலக செய்திகள்

வயதான தம்பதியரின் பயணம்.. 50 மீட்டர் பள்ளத்தில் விழுந்த வாகனம்.. அதிர்ஷ்டவசமாக நடந்த செயல்..!!

சுவிட்சர்லாந்தில் வயதான தம்பதியர் வாகனத்தில் சென்றபோது 50 மீட்டர் பள்ளத்தில் விழுந்து லேசான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள Graubünden என்ற மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று Valtoris பகுதி வழியே, 87 வயதுடைய முதியவர், 84 வயதான தன் மனைவியுடன் மலைப்பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஒரு ஊசி வளைவில் திரும்பும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையை தாண்டி சுமார் 50 மீட்டர் குழியில் விழுந்திருக்கிறது.

இதில் அந்த முதியவரின் மனைவி லேசான காயங்களுடன் எழுந்துவிட்டார். அதன் பின்பு காரிலிருந்து தன் கணவரை காப்பாற்றுவதற்கு முயற்சித்துள்ளார். எனினும் முடியாததால் உதவி கேட்டுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற நபர் உடனடியாக வந்து அவரை வாகனத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

அதன்பின்பு மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தம்பதியர் இருவருக்கும் முதலுதவி அளித்துவிட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |