Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணாமலை பல்கலைகழகம் முன் நேர்ந்த சோகம்… மாணவி மீது ஆசிட் வீசிய காதலன்..!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் 2 -ஆம்  ஆண்டு படித்து வரும்  மாணவி மீது காதலன்  ஆசிட் வீசியதில் அவர் படுகாயமடைந்தார்.  

இன்றைய சமூகத்தில் காதலுக்காக எதை வேண்டுமானாலும் இளைஞர்கள் செய்கின்றனர். அதே நேரத்தில் ஒருசிலர் காதலில்  ஏதாவது பிரச்னையோ, தாம் விரும்பும் பெண் கிடைக்காமல் போனாலோ கொலை செய்யவும் தயங்குவதில்லை. ஒருசில  ஆண்கள் முகத்தில் ஆசிட் வீசி தங்கள் கோபத்தை அடக்கி கொள்கின்றனர். அந்தவகையில்  சென்னை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் இரண்டாம் ஆண்டு படித்து வரும்  சுசித்ரா என்ற மாணவி மீது சக மாணவரான முத்தமிழன் என்ற காதலன்  ஆசிட் வீசியுள்ளார்.

Related image

இதில் சுசித்ரா படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஆசிட் வீசிய முத்தமிழனை பிடித்து சக மாணவர்கள் அடித்து உதைத்ததில் அவர் படுகாயமடைந்தார். அதன்பின் படுகாயத்தால் துடிதுடித்த மாணவியும்  மாணவரும்  சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |