அமெரிக்க தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இது இந்தியாவில் கொரொனாவுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட 4வது தடுப்பூசியாகும். மேலும், இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாடர்னா அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் இது தயாரிக்க படுகின்றது. அமெரிக்காவில் மாடர்னா தடுப்பு மருந்து உடலில் செலுத்தபட்ட 95 சதவீதம் பேருக்கு பலனளித்துள்ளது. மாடர்னாவின் இரு டோஸ்கள் இடையே நான்கு வார கால இடைவெளி இருக்க வேண்டும். மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.