Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. காவல்துறையினரின் விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை நல்லான்பிள்ளை 2-வது தெருவில் அய்யப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் மது அருந்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அய்யப்பன் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அய்யப்பனை கைப்பற்றி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அய்யப்பன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |