மூன்று மாதம் சம்பளம் பாக்கியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகராட்சி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் புதிய பேருந்து நிலையம் அருகே திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களின் சங்க தலைவரான விடுதலை குமரன் என்பவர் முன்னிலையில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த 3 மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும் எனவும், முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து தூய்மை பணியாளர்களுக்கென பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி பொறியாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூய்மை பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு தூய்மைப் பணியாளர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.