Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரில் இதுதான் இருக்கா…? வசமா மாட்டிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை கடத்தியவர்களுக்கு னத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்கு மண்ணுளி பாம்பை கடத்தி வருவதாக பூதப்பாண்டி வனச்சரக அதிகாரி திலீபனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனவர்கள் ரமேஷ், பிரசன்னா மற்றும் வனக்காப்பாளர் சக்திவேல், ஆல்வின் ஆகியோர் வடசேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கேரள பதிவெண்ணுடன் வந்த ஒரு காரை வனத்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் பின்புறம்2. 200 கிலோ எடையுள்ள மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்திருந்ததை வன அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து காரில் வந்த 3 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த், சதீஷ் சந்திரன் நாயர் மற்றும் களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஜோஸ் வில்பர்ட் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து கொல்லம் மாவட்டத்தில் இருந்து இந்த பாம்பை கடத்தி நாகர்கோவிலில் விற்பதற்காக வந்ததும் வன அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதன்பின் அவர்களிடமிருந்த அந்த பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்து 3 பேருக்கும் தலா 75 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 2 1/4 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் வனத்துறையினர் அந்த பாம்பை ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் கொண்டு விட்டனர்.

Categories

Tech |