Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனி பொல்லார்ட் தான் கேப்டன்”… வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கிரோன் பொல்லார்ட்  கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றது அந்த அணி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடர்களில் 10 ஆட்டங்களில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. அதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான தொடரிலும்  ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.  அந்த அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாகவும், டி20 போட்டிக்கு பிராத்வெயிட் கேப்டனும் செயல்பட்டு வந்துள்ளனர்.

Image result for Pollard has been named captain .

இந்நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன்களை  மாற்ற அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு செய்தது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கிரென் பொல்லார்ட்  கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

Image result for Pollard has been named captain .

அதிரடி ஆட்டக்காரரான பொல்லார்டு கடந்த 2016- ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் பங்கேற்று ஆடி இருந்தார். அதன் பிறகு அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் டி 20 போட்டிக்கும் அவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தார்.  கடைசியாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் தான் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பொல்லார்ட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |