Categories
மாநில செய்திகள்

அவர் அம்மா வீட்டில் வேலைக்காரர்…. வேலை முடிந்ததும் போய்விட்டார் – சி.வி சண்முகம் காட்டம்…!!!

தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 44 ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்

44வது, 45 என வரிசையாக ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றது. இவ்வாறு இவர் அனுப்பிய ஆடியோக்கள் 100-ஐ நெருங்குகின்றன.  இந்நிலையில் தற்போது மற்றுமொரு வீடியோ ஆடியோ வெளியாகி உள்ளது. இந்நிலையில் அமைச்சர் சி.வி சண்முகம் சசிகலா என்பவர் யார்? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்ததும் அவர் சென்றுவிட்டார். அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக யார் தயவிலும் இல்லை என்று காட்டம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |