தமிழக காவல்துறையின் 30வது சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், “இந்த அரிய வாய்ப்பைத் தந்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. தன்னுடைய பணி நாட்களில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும்.
முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகள் காவலர்களுக்கு வழங்கப்படும். காவலர்களின் குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இலக்குகளை அடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.