நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை-15 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் அனுமதி அளித்துள்ளது. கோயில்கள் மாலை 5 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்கவும், உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படவும் அரசு அனுமதி அளித்துள்ளது.