இந்திய தூதரகம், ஆப்கானிஸ்தானில் தீவிரவாத குழுவின், கலவரங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக இந்திய மக்களை, எச்சரித்துள்ளது.
இந்திய தூதரகமானது, ஆப்கானிஸ்தானில் வாழும் இந்திய குடிமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள் என்று எச்சரித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் பயணம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அங்கு தீவிரவாத அமைப்பினரின் கலவரங்கள் அதிகரிக்கலாம். நாட்டின் பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது. எனவே அந்நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களையும் மக்களையும் நோக்கி தாக்குதல் நடத்தப்படலாம். இந்தியாவை சேர்ந்த மக்களுக்கு மட்டும் இதில் விலக்கு இல்லை.
இந்திய மக்கள் கடத்தப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே முக்கிய நகரங்களைத் தாண்டி பயணம் மேற்கொள்வதை முடிந்தவரை தவிருங்கள். தேவையான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள். அதிலும் கூட்டமாக செல்வதை தவிர்த்துவிடுங்கள். ஆப்கானிஸ்தானிற்கு செல்லும் இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் அல்லது மின்னஞ்சலில் பதிவு செய்துவிட வேண்டும்.
மேலும், தற்போது ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் பதிவு செய்யவில்லை எனில் விரைவாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது