Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு… வெளியான மகிழ்ச்சி செய்தி… அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை செப்டம்பர் மாதம் வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவகுமார் மிஸ்ரா கூறியதாவது: “கடந்த 26 மற்றும் 27ம் தேதிகளில் டெல்லியில் வடக்கு பிளாக்கில் மந்திரிசபை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசு ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தை செய்தது. இதில் 28 முக்கிய பிரச்சினைகளை பற்றி விவாதம் செய்யப்பட்டது.

ஒன்றரை ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது. அதில் நிறுத்தி வைக்கப்பட்ட 3 அகவிலைப்படி உயர்வையும், வருகிற ஜூலை மாதம் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு மொத்தமாக சேர்த்து செப்டம்பர் மாதம் வழங்க உள்ளதாக மந்திரி சபை செயலாளர் ஒப்புக் கொண்டார்” என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |